குடிநீர் வழங்கக்கோரி முற்றுகை போராட்டம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : ஒழலுாரில், குடிநீர் வினியோகம் முறையாக வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள், கிராம சேவை, அலுவலகத்தை, நேற்று, முற்றுகையிட்டனர்.செங்கல்பட்டு அடுத்த, ஒழலுார் ஊராட்சியில், அண்ணா தெருவில், 900க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு, தலா, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இதன் மூலம், தினமும், குடிநீர்
 குடிநீர் வழங்கக்கோரி முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு : ஒழலுாரில், குடிநீர் வினியோகம் முறையாக வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள், கிராம சேவை, அலுவலகத்தை, நேற்று, முற்றுகையிட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த, ஒழலுார் ஊராட்சியில், அண்ணா தெருவில், 900க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு, தலா, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இதன் மூலம், தினமும், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட பகுதியில், மூன்று மாதங்களாக, குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது.இதனால், குடிநீர் சீராக வழங்கக்கோரி, அதே பகுதியில் உள்ள, கிராம சேவை அலுவலகம் அருகில், காலி குடங்களுடன், பெண்கள் உட்பட நுாறு பேர், முற்றுகை போராட்டத்தில், நேற்று, ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சங்கர், அவர்களிடம்பேச்சு நடத்தி, தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அதன் பின், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X