சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பி அறுந்து பூ விற்கும் இருவர் காயம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
மீஞ்சூர் : வீடு இடிக்கும்போது, உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, பூ விற்கும் இரண்டு பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்தனர்.மீஞ்சூர், வேளாளர் தெருவில், நேற்று காலை, சுரேஷ், 56, என்பவருக்கு சொந்தமான, பழைய கட்டடம் ஒன்றை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் நடந்தன.அப்போது, ஜே.சி.பி., இயந்திரத்தின் ஒரு பகுதி, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி மீது பட்டு அறுந்தது.

மீஞ்சூர் : வீடு இடிக்கும்போது, உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, பூ விற்கும் இரண்டு பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்தனர்.

மீஞ்சூர், வேளாளர் தெருவில், நேற்று காலை, சுரேஷ், 56, என்பவருக்கு சொந்தமான, பழைய கட்டடம் ஒன்றை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் நடந்தன.அப்போது, ஜே.சி.பி., இயந்திரத்தின் ஒரு பகுதி, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி மீது பட்டு அறுந்தது. அறுந்த மின் கம்பி அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த, இரண்டு பெண்கள் மீது விழுந்ததில், அவர்கள் மீது, மின்சாரம் பாய்ந்தது.இதில், பெரியபாளையம், தண்டலம் Sபகுதியைச் சேர்ந்த கீதா, 35, கை, கால்கள் கருகிய நிலையில் பலத்த காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், மீஞ்சூர், புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா, 35, லேசான காயங்களுடன் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெறுகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் போலீசார், வழக்கு பதிந்து, பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் உட்பட மூன்று பேரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X