பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி அரசு மருத்துவமனை 3 டாக்டர்களுக்கு கொரோனா

Added : செப் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் மருத்துவர் உட்பட இரண்டு ஊழியர்கள் என, 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதனால், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக பிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், திருப்பூர் அரசு

அவிநாசி:அவிநாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் மருத்துவர் உட்பட இரண்டு ஊழியர்கள் என, 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதனால், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக பிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில், மருத்துவமனை வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மருத்துவமனையை வரும், 14ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று (12ம் தேதி) நடக்க இருந்த சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம், அருகேயுள்ள அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X