சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது வண்ணாரப்பேட்டையில் கல்யாண வீட்டில் கத்திக்குத்து

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை : தண்டையார்பேட்டையில், திருமண மண்டபத்தில் குத்தாட்டம் போடுவதில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில், இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.சென்னை, கொருக்குப்பேட்டை, பெருமாள் தோட்டத்தைச் சேர்ந்த குமார் மகள் மஞ்சுளாவிற்கு திருமணம் முடிந்து, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில், நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், மணமகளின்

புதுவண்ணாரப்பேட்டை : தண்டையார்பேட்டையில், திருமண மண்டபத்தில் குத்தாட்டம் போடுவதில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில், இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

சென்னை, கொருக்குப்பேட்டை, பெருமாள் தோட்டத்தைச் சேர்ந்த குமார் மகள் மஞ்சுளாவிற்கு திருமணம் முடிந்து, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில், நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், மணமகளின் அண்ணன் வினோத்தின் நண்பர்களும், மணமகனின் நண்பர்களும் குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்போது, இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இரு தரப்பும் ஒருவரையொருவர் தாக்கி, கத்தியால் வெட்டினர்.இதில், வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ், 20, கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், 22, ஆகியோருக்கு வெட்டு விழுந்தது.இதைக் கண்டு, திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருமண மண்டபமே ரணகளமாக காட்சியளித்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக, புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜான்சன், 26. வினோத், 25, வசந்த், 24, அப்துல் கரீம், 25, திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த ஆகாஷ், 21, ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X