சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு மோசடி பாதித்தவர்கள் மறியல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருத்தணி : ஏலச்சீட்டு நடத்திய தனியார் நிறுவனத்திடம், பணம் கட்டி ஏமாந்தவர்கள், திருத்தணி பை - பாஸ் சாலையில் மறியலில் நேற்று ஈடுபட்டனர்.திருத்தணி - சித்துார் சாலையில், தனியார் நிறுவன கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு நேரில் சென்று, ஒரு தொகை முன்பணமாக
ஏலச்சீட்டு மோசடி பாதித்தவர்கள் மறியல்

திருத்தணி : ஏலச்சீட்டு நடத்திய தனியார் நிறுவனத்திடம், பணம் கட்டி ஏமாந்தவர்கள், திருத்தணி பை - பாஸ் சாலையில் மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

திருத்தணி - சித்துார் சாலையில், தனியார் நிறுவன கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு நேரில் சென்று, ஒரு தொகை முன்பணமாக செலுத்தினால், உங்களுக்கு மாதா, மாதம் பெருந்தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டினால், உங்களுக்கு தங்கம் மற்றும் மளிகை பொருட்கள் வீட்டிற்கு நேரில் வந்து வழங்குகிறோம்.

இந்த பொருட்களின் மதிப்பு நீங்கள் கட்டிய தொகை இரட்டிப்பு ஆகும் என, ஆசை வார்த்தைகள் கூறியதால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் சேர்ந்தனர்.இந்நிலையில், கட்டிய பணத்திற்கு வட்டி மற்றும் பொருட்கள் மூன்று மாதமாக வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், கிளை அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்ட போது, அங்குள்ள ஊழியர்கள் சரியாக பதில் கூறவில்லை.ஒரு வாரமாக அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், பாதித்தவர்கள், 100க்கும் மேற்பட்டோர், திருத்தணி பைபாஸ் சாலையில் மறியலில்நேற்று ஈடுபட்டனர்.திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் பேசி, புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என, உறுதி கூறியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X