பொது செய்தி

தமிழ்நாடு

தேக்கு மரங்கள் கம்பீரம் காட்டும்!

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:அவிநாசி, புதுப்பாளையம் கிராமத்தில் நேற்று, 'பிரைட்' தோட்டத்தில், 230 தேக்குமரக்கன்று நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், துடிப்பான, பசுமை ஆர்வமுள்ள இளைஞர்கள், பசுமை அமைப்பாக ஒருங்கிணையும் அளவுக்கு துாண்டுதலாக இருந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், எண்ணற்ற பசுமை அமைப்புகளை உருவாக்கிய, அமைப்பாக, 'வெற்றி' அமைப்பு விளங்குகிறது.பல்வேறு
 தேக்கு மரங்கள் கம்பீரம் காட்டும்!

திருப்பூர்:அவிநாசி, புதுப்பாளையம் கிராமத்தில் நேற்று, 'பிரைட்' தோட்டத்தில், 230 தேக்குமரக்கன்று நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், துடிப்பான, பசுமை ஆர்வமுள்ள இளைஞர்கள், பசுமை அமைப்பாக ஒருங்கிணையும் அளவுக்கு துாண்டுதலாக இருந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், எண்ணற்ற பசுமை அமைப்புகளை உருவாக்கிய, அமைப்பாக, 'வெற்றி' அமைப்பு விளங்குகிறது.பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படுவதால், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், ஒவ்வொரு ஆண்டும், சாதனை திட்டமாக மாறியுள்ளது. தற்போது, ஏழாவது திட்டத்தில், பசுமை ஆர்வலர், பசுமை அமைப்புகளுடன் இணைந்து, விவசாய நிலங்களில் நாட்டுமரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.அவ்வகையில், தரிசு நிலங்களில், நாட்டு மரங்களும், பழவகை மரங்களும் நடப்படுகின்றன. அவிநாசி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தில் நேற்று மரக்கன்று நடவு நடந்தது. அங்குள்ள, 'பிரைட்' தோட் டத்தில் நடந்த நிகழ்ச்சியில், உரிமையாளர் ரவிசங்கர், மீரா, கவுசிக் சிவராம் ஆகியோர், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.நேற்று ஒரே நாளில், 230 தேக்கு மரக்கன்றுகளும், ஐந்து செம்மர கன்றுகளும் நடப்பட்டன. இதனால், வானம் பார்த்துக்கிடந்த நிலத்தில், பசுமை கூடாரம் போர்த்தியது போல் தேக்கு மரங்கள் அணிவகுக்க போகின்றன.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X