பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் டாக்டர் குழு!

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:''பத்து முகாம்களுக்கு ஒரு டாக்டர் குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,'' என, கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து, கண்காணிப்பு அலுவலர் (குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர்) தட்சிணாமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
 தயார் நிலையில் டாக்டர் குழு!

திருப்பூர்:''பத்து முகாம்களுக்கு ஒரு டாக்டர் குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,'' என, கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து, கண்காணிப்பு அலுவலர் (குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர்) தட்சிணாமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் வினீத் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், கொரோனா சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.கலெக்டர் வினீத் பேசு கையில், ''18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். மாவட்டத்தில், 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:அனைத்து அரசுத்துறையினர், தன்னார்வலர் இணைந்து, தடுப்பூசி முகாம் பணியை செம்மையாக மேற்கொள்ள வேண்டும். பத்து முகாம்களுக்கு ஒரு டாக்டர் குழுவினரை, தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.பதிவு பணிகளை தடையின்றி செய்ய, இணையதள வசதியை ஏற்படுத்தி வைக்க வேண்டும். சிறப்பு முகாம் இடங்கள் குறித்து, பொதுமக்களுக்கு, ஆட்டோக்கள் மூலம், தொடர்ச்சியாக அறிவிப்பு செய்ய வேண்டும்.ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி மருந்துகளை, நான்குமணி நேரத்துக்கு ஒருமுறை குளிர்பெட்டி யில் இருந்து எடுத்துச்சென்று வினியோகிக்க, வாகன வசதியைஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், உதவி கலெக்டர் அல்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X