பொது செய்தி

தமிழ்நாடு

'அவசரத்துக்கு' சிக்கல்!

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தி கட்டும் பணி நடப்பதால், தற்காலிகமாக யுனிவர்சல் தியேட்டர் ரோடு, காமராஜர் ரோடு பாலத்தின் கீழ் ஆகிய இரு இடங்களில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அப்பகுதியில், மாநகராட்சி கட்டியுள்ள கழிப்பிடங்கள் பகலில் திறக்கப்படுகிறது.கட்டணம் செலுத்தி பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த
 'அவசரத்துக்கு' சிக்கல்!

திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தி கட்டும் பணி நடப்பதால், தற்காலிகமாக யுனிவர்சல் தியேட்டர் ரோடு, காமராஜர் ரோடு பாலத்தின் கீழ் ஆகிய இரு இடங்களில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அப்பகுதியில், மாநகராட்சி கட்டியுள்ள கழிப்பிடங்கள் பகலில் திறக்கப்படுகிறது.கட்டணம் செலுத்தி பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த கழிப்பிடம் இரவில் 8:00 மணிக்கு பின் பூட்டப்படுகிறது. சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கு நள்ளிரவு வரை பஸ் இயக்கம் உள்ளது.வெளியூரில் இருந்து அதிகாலையில் பஸ்களும் வருகின்றன.மாநகராட்சி கழிப்பிடம் பூட்டி வைக்கப்படுவதால், இயற்கை உபாதைகளை போக்க இரவு நேரத்தில் பஸ் விட்டு இறங்கும் பயணிகளுக்கு குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். இரு பஸ் ஸ்டாண்டிலும், 24 மணி நேரமும் கழிப்பிடம் செயல்பட தேவையான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X