பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி பயிரை 'காலி' செய்யும் மாவுப்பூச்சி!

Added : செப் 11, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில், முத்துார் அருகே, வாய்க்கால்மேட்டுப்புதுார், காங்கயம்பாளையம் பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பூச்சி மருந்தை தெளித்தும் கட்டுக்குள் வரவில்லை. இலையில் வெண் படலம், ஓட்டை விழுந்து, பச்சையம் நீங்கி கருகி மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.சில விவசாயிகள் தாங்கள்
 மரவள்ளி பயிரை 'காலி' செய்யும் மாவுப்பூச்சி!

வெள்ளகோவில்:வெள்ளகோவில், முத்துார் அருகே, வாய்க்கால்மேட்டுப்புதுார், காங்கயம்பாளையம் பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பூச்சி மருந்தை தெளித்தும் கட்டுக்குள் வரவில்லை. இலையில் வெண் படலம், ஓட்டை விழுந்து, பச்சையம் நீங்கி கருகி மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.சில விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பகுதியில் உள்ள அனைத்து மரவள்ளிக்கிழங்கு செடிகளையும் முற்றிலும் அழித்துவிட்டு, மீண்டும் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு உள்ளனர். விவசாயிகள் தலைப்புகையிலையை தயிர் மற்றும் வேப்பெண்ணெயில் கலந்து ஊறவைத்து அதை செடியில் தெளித்து மாவுப்பூச்சி தாக்குதலை குறைத்து வருகின்றனர்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சர்மிளாவிடம் கேட்டபோது, 'மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த வெள்ளகோவில் மற்றும் முத்துார் தோட்டக்கலை துறை அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்யும் மருந்துகளை கலந்து தெளித்தால் முற்றிலும் அழிக்கலாம்.மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உட்பட்ட கரணையை மீண்டும் நட்டு உபயோகப்படுத்தக் கூடாது' என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X