பொது செய்தி

இந்தியா

பருவ மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலை

Updated : செப் 12, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்க, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும், தலைமைச் செயலர் இறையன்பு அறிவுரை வழங்கி உள்ளார்.தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.தலைமைச்
பருவ மழை பாதிப்பை  எதிர்கொள்ள தயார் நிலை

வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்க, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும், தலைமைச் செயலர் இறையன்பு அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.தலைமைச் செயலர் இறையன்பு தலைமை வகித்தார்.

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பல்வேறு துறை செயலர்கள், போலீஸ் அதிகாரிகள், ராணுவம், விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல் படை, வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தலைமை செயலர் கூறிய அறிவுரைகள்:

* பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, குறுகிய, நடுத்தர, நீண்டகால வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். வடிகால்கள் மற்றும் ஏரி, குளங்களை துார் வார, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தயாரிக்க வேண்டும்

* பொது மக்களுக்கு உரிய நேரத்தில், முன்னெச்ச ரிக்கை தகவல்களை வழங்க, அனைத்து மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும், அவசர கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்

* பருவ மழை துவங்குவதற்கு முன், பேரிடர் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள் நடத்த வேண்டும். முன்னெச்ச ரிக்கை தகவல்களை விரைவாக அளிக்க, குடியிருப்போர் நலச் சங்கங்களின் பட்டியல் தயாரித்து, 'வாட்ஸ் ஆப்' குழு அமைக்க வேண்டும்

* கிராமங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட, இளைஞர்களைக் கண்டறிந்து, பயிற்சி அளித்து, தேவையான மீட்பு உபகரணங்களை அவர்களுக்கு வழங்கி, ஆயத்த நிலையை மேம்படுத்த வேண்டும்

* ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை போதுமான இருப்பு வைக்க வேண்டும். அரசு சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேடல், மீட்பு நிவாரண பணிகளில் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்

* ஒவ்வொரு நகரமும், வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு நிலையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, இயந்திர நீர் இறைப்பான்கள் தயாராக இருக்க வேண்டும்

* மாவட்டந்தோறும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் வரைபடம் கட்டாயம் தயார் செய்ய வேண்டும்.நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு பல அறிவுரைகளை வழங்கிஉள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202107:38:36 IST Report Abuse
அப்புசாமி எல்லா அதிகாரிகளையும் மாற்றம் செஞ்சு முடிச்சுட்டீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X