பொது செய்தி

தமிழ்நாடு

பூண்டியுடன் பழங்கரை இணைய தயக்கம் ஏன்?

Added : செப் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:பழங்கரை ஊராட்சியை நகராட்சியாக மாற உள்ள திருமுருகன்பூண்டியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அவிநாசி நகரை பழங்கரை சார்ந்திருப்பது மட்டுமல்ல... மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி பெருகிய அளவுக்கு திருமுருகன்பூண்டியில், உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை என்பதும், இதற்கு முக்கிய காரணம்.வசதி குறைந்த கட்டடத்தில் செயல்படும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி

அவிநாசி:பழங்கரை ஊராட்சியை நகராட்சியாக மாற உள்ள திருமுருகன்பூண்டியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அவிநாசி நகரை பழங்கரை சார்ந்திருப்பது மட்டுமல்ல... மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி பெருகிய அளவுக்கு திருமுருகன்பூண்டியில், உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை என்பதும், இதற்கு முக்கிய காரணம்.வசதி குறைந்த கட்டடத்தில் செயல்படும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம், சொந்த கட்டடம் இல்லாமல் திணறும் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை தவிர, வேறெந்த அரசுத்துறை கட்டடங்களும் அங்கு இல்லை.
திருப்பூரின் பிரதான சாலையில் உள்ள இந்த பேரூராட்சியில், பஸ் ஸ்டாண்ட் கூட இல்லை.சாலையோரம் தான் காய்கறி மற்றும் இறைச்சிக்கடைகள் செயல்படுகின்றன; பிரத்யேக மார்க்கெட் கிடையாது. நகரை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிகளவில் உருவான பனியன் தொழில் கூடங்கள், அதை மையமாக வைத்து வளர்ந்த ரியல் எஸ்டேட் தொழில், அபார்ட்மென்ட் மற்றும் வீடுகள் என, மக்கள் தொகை சார்ந்த வளர்ச்சியை மட்டுமே, பூண்டி பேரூராட்சி கொண்டுள்ளது.உள்கட்டமைப்பு வசதிகள் பெருக வேண்டிய கட்டாயம், பூண்டிக்கு அவசியமாகிறது. இந்த கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைந்தால், பழங்கரைக்கான கட்டமைப்புகளை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X