பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டில் கிருஷ்ணா நீர்வரத்து

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை : ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு, சாய்கங்கை கால்வாய் வழியே இதுவரை, 4.1 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது.தமிழக - ஆந்திரா அரசுகளின் ஒப்பந்த படி, ஜூன் 16ம் தேதி முதல், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது.கிருஷ்ணா நீர், பூண்டி நீர்த்தேக்கத்தில் சேகரித்து,அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய
 நடப்பாண்டில் கிருஷ்ணா நீர்வரத்து

சென்னை : ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு, சாய்கங்கை கால்வாய் வழியே இதுவரை, 4.1 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது.

தமிழக - ஆந்திரா அரசுகளின் ஒப்பந்த படி, ஜூன் 16ம் தேதி முதல், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது.கிருஷ்ணா நீர், பூண்டி நீர்த்தேக்கத்தில் சேகரித்து,அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு நீர் அனுப்பப்படுகிறது.இந்த வகையில், நடப்பாண்டில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கிருஷ்ணா நீர், ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு வருகிறது.

நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு வினாடிக்கு, 600 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை, 4.1 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது.பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 523 கன அடியும், மழை நீர், 245 கன அடி என, மொத்தம், 768 கனஅடி நீர் வரத்து உள்ளது; நீர்மட்டம் 33.62 அடியாக உள்ளது.

இங்குள்ள இணைப்புக் கால்வாய் மூலம், வினாடிக்கு, 328 கன அடி நீர் புழல் நீர்த்தேக்கத்திற்கும்; 250 கன அடி நீர் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கும் திறந்து விடப்படுகிறது.பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு, 50 கன அடி நீர், சோழவரம் நீர்த்தேக்கத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X