சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ

Added : செப் 11, 2021
Share
ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில் போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.எஸ்.பி., கார்த்திக் கூறியதாவது:வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவும், உங்கள் ஏ.டி.எம்., கார்டு காலாவதியாகிவிட்டது. உங்கள் ஏ.டி.எம்., கார்டின் 16 இலக்க எண்களை சொல்ல கூறுவார்கள். எந்த ஒரு வங்கி மேலாளரும், வங்கியில் இருந்து இதுபோல்

ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில் போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

எஸ்.பி., கார்த்திக் கூறியதாவது:வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவும், உங்கள் ஏ.டி.எம்., கார்டு காலாவதியாகிவிட்டது. உங்கள் ஏ.டி.எம்., கார்டின் 16 இலக்க எண்களை சொல்ல கூறுவார்கள். எந்த ஒரு வங்கி மேலாளரும், வங்கியில் இருந்து இதுபோல் கேட்பது இல்லை. கேட்கவும் மாட்டார்கள். அப்படி மோசடி பேர்வழிகள் கேட்டு உங்கள் பணத்தை அபகரிப்பார்கள்.இளம்பெண்களுக்குதெரிந்த வாலிபர்கள் செல்பி எடுத்து அனுப்ப சொன்னால் அதுபோல் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுப்ப வேண்டாம். அப்படி அனுப்பினால்உங்கள் படத்தை மார்பிங் செய்து உங்களை மிரட்டலாம். ஆன்லைன் தவறானமுதலீட்டு ஆப்களில் பார்த்து முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம்.இணையதளத்தில் பொருட்களை வாங்கும் முகவரியை சரிபார்க்கவும். போலி இணையதள முகவரிகளை நம்பி ஏமாற வேண்டாம். பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே கியு ஆர் கோடு தேவைப்படும். ஒருவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு நமது கியூ.ஆர் கோடு அனுப்ப வேண்டியது இல்லை.அப்படி கேட்டால் திருட்டு கும்பல் என்று தவிர்த்து விடுங்கள். உங்கள் நண்பரின் பெயரில் உள்ள போலி முகநுால் முகவரியில் இருந்து பண உதவி கேட்டால் போலீசாருக்கு தெரிவிக்கவும். மாவட்டத்தில் காணாமால் போன அலைபேசிகளில் இதுவரை 122 கண்டுபிடித்து கொடுத்துள்ளோம்.அலைபேசி காணாமல்போனால் உடனடியாக புகார் அளிக்கலாம். இணையவழி பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், இணையவழி குற்றங்களும் அதிகரிக்கின்றன. புகார் அளிப்பவரின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும். எனவே தயங்காமல் விரைவாக புகார் அளிக்க வேண்டும்.சமீப காலமாக ஆன்-லைன் வேலை மோசடி, வங்கி பண மோசடி, கிப்ட் இருப்பதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தல் போன்ற புகார் அதிகம் வருகின்றன. பொதுமக்கள் இதனை நம்ப கூடாது. ஒரு தனி நபரை ஆசை கூறி ஏமாற்றுவதை நீங்கள் உணர்ந்து நம்ப கூடாது.குறிப்பாக பெண் குழந்தைகளை குறிவைத்து குற்றங்கள் நடக்கின்றன. இதனை தவிர்க்க குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பள்ளி பாடங்களை படிக்கின்றனரா என்பதை அடிக்கடி பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இன்ஸ்டா கிராம் நண்பர் பெண் குழந்தைகளிடம் பேசி காதல் வசப்படுத்தி கடத்தி செல்வது நடக்கின்றன. இணையதள விளையாட்டுகள், போட்டிகள் விளையாட்டு அடுத்த லெவல் என அவர்களை துாண்டி அடிமையாக்குகின்றனர். எனவே இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில்உடனடியாக புகார் அளிக்கலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X