மானாமதுரை-ராமநாதபுரம் வழியில்பஸ்கள் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு, நேற்று மானாமதுரை, பார்த்திபனுார் வழியாக பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். நேற்று (செப்.,11) பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதனையடுத்து சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது.கமுதி,

ராமநாதபுரம்--பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு, நேற்று மானாமதுரை, பார்த்திபனுார் வழியாக பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். நேற்று (செப்.,11) பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதனையடுத்து சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது.கமுதி, முதுகுளத்துார், பார்த்திபனுார், பரமக்குடி பகுதிகளில் டவுன் பஸ்கள் இயங்கவில்லை. மதுரை ராமநாதபுரத்திற்கு பூவந்தி, சிவகங்கை, காளையார்கோயில், கைகாட்டி, ஆர்.எஸ்.மங்கலம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டது. மானாமதுரை, பார்த்திபனுார் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிச்சீட்டு வைத்துள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றாட வேலைக்கு செல்லும் கூலிப்பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். போதிய வாகன வசதியின்றி போலீசார் சிலர் சரக்கு வாகனத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X