மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கல்

Added : செப் 11, 2021
Share
ராமநாதபுரம்--மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் காவிரிகூட்டுகுடிநீர் வழங்கப்படுகிறது. இன்னமும் பல கிராமங்களில் குறைந்த அளவே வருவதால் குடிநீருக்காக தினமும் குடங்களுடன் பலமணிநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுவது தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னையை தீர்க்க கடந்த 2009 முதல் காவிரிகூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம்--மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் காவிரிகூட்டுகுடிநீர் வழங்கப்படுகிறது.

இன்னமும் பல கிராமங்களில் குறைந்த அளவே வருவதால் குடிநீருக்காக தினமும் குடங்களுடன் பலமணிநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுவது தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னையை தீர்க்க கடந்த 2009 முதல் காவிரிகூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகள், பேரூராட்சி, கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. காவிரி கூட்டுகுடிநீர் குழாய் தொடர்ந்து பராமரிப்பு இல்லாத காரணத்தினால் குழாய் அல்லது வால்வு சேதமடைந்து. குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. பல கிராமங்களில் குடிநீர் சிலமணி நேரம் மட்டுமே வருவதாக மக்கள் புலம்புகின்றனர். அச்சுந்தன்வயல், கருங்குளம், லாந்தை, சத்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டுகுடிநீரை பிடிக்க தள்ளுவண்டிகள், குடங்களுடன் நீண்டநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீருக்காக குடும்பத்தில் பெரியவர் ஒருவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கவேண்டிய நிலை உள்ளது. கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்க கிராமப்புறங்களில் தடையின்றி காவிரி கூட்டுகுடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X