தமிழ்நாடு

மருத்துவர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Added : செப் 11, 2021
Share
Advertisement
வடபழநி : 'சர்வதேச யுனிசெப் கவுன்சில்' சார்பில், மருத்துவர் நளினிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.சர்வதேச யுனிசெப் கவுன்சில் சார்பில், நடப்பாண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, வடபழநி, குமரன் காலனியில் நேற்று நடந்தது.இந்நிகழ்வில், அவ்வமைப்பின் துணை தலைவர் கிம் கோபி, தேசிய இயக்குனர் சுரேஷ் பாபு, தேசிய முதன்மை செனட்டர் கோபி கண்ணன், இணைச் செயலர் ராபின்
 மருத்துவர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வடபழநி : 'சர்வதேச யுனிசெப் கவுன்சில்' சார்பில், மருத்துவர் நளினிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச யுனிசெப் கவுன்சில் சார்பில், நடப்பாண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, வடபழநி, குமரன் காலனியில் நேற்று நடந்தது.இந்நிகழ்வில், அவ்வமைப்பின் துணை தலைவர் கிம் கோபி, தேசிய இயக்குனர் சுரேஷ் பாபு, தேசிய முதன்மை செனட்டர் கோபி கண்ணன், இணைச் செயலர் ராபின் ராமாய் ஹெனி, நேச்சுரல் சலுான் முதன்மை நிர்வாக அதிகாரி குமாரவேல், கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்ட எஸ்.பி., மகேஷ் பி.மேகன்னவர் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என, பல துறைகளில் சேவை செய்தோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், சேவைகளின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இதில், புதுச்சேரி, 'ஜிப்மர்' மருத்துவமனையில், குழந்தைகள் நல தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், புதுச்சேரி ஹீமோபிலியா சங்க நிறுவன தலைவருமான மருத்துவர் நளினிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டார்.'ஹீமோபிலியா' என்பது அரிதான, ரத்தம் உறைவதில் இருந்து தடுக்கக்கூடிய ஒரு மரபணு நிலையாகும். இந்த பிரிவில் 40 ஆண்டு கால அவரது சேவைக்காக, இந்த விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X