காங்., தலைவர் அழகிரிக்கு பா.ஜ., துரைசாமி கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., தலைவர் அழகிரிக்கு பா.ஜ., துரைசாமி கண்டனம்

Added : செப் 11, 2021
Share
நாமக்கல்:''தமிழக கவர்னர் நியமனம் குறித்து, தமிழக காங்., தலைவர் அழகிரி விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது,'' என, பா.ஜ., துணை தலைவர் துரைசாமி கூறினார்.நாமக்கல்லில் அவர் கூறியதாவது:தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உளவுப்பிரிவுஅவர், நாகாலாந்து மாநிலத்தில் பணியாற்றி, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி உள்ளார்.

நாமக்கல்:''தமிழக கவர்னர் நியமனம் குறித்து, தமிழக காங்., தலைவர் அழகிரி விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது,'' என, பா.ஜ., துணை தலைவர் துரைசாமி கூறினார்.

நாமக்கல்லில் அவர் கூறியதாவது:தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


உளவுப்பிரிவு

அவர், நாகாலாந்து மாநிலத்தில் பணியாற்றி, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி உள்ளார். உளவுப்பிரிவு தலைவராக இருந்து திறம்பட பணியாற்றி உள்ளார். அவரை, தமிழக கவர்னராக ஜனாதிபதி நியமித்துள்ளார்; புதிய கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கவர்னர் நியமனம் குறித்து தமிழக காங்., தலைவர் அழகிரி விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. பாரதியார் மிகச் சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக இருந்துள்ளார். வட மாநிலங்களில் நடக்கும் விழாக்களிலும், பாரதியார் குறித்த சம்பவங்களை, பிரதமர் மோடி எடுத்துரைத்து, இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழக அரசு, பாரதியார் நுாற்றாண்டு விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் பழனிசாமி, 110 விதியின் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார் என, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.


கண்காணிப்பு

தமிழக அரசு பொறுப்பேற்ற 120 நாட்களில் எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது; முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டார்; அதில் எத்தனை, திட்டங்களாக மாறியுள்ளன. எத்தனை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை மக்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X