அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரண்டவன் கண்ணுக்கு... அண்ணாமலை கிண்டல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை:''கவர்னர் மாற்றப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் காங்., மாநில தலைவர் அழகிரி உள்ளார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பாதிப்புமதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: வாரணாசி பல்கலையில், மகாகவி பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அறிவிப்பை

மதுரை:''கவர்னர் மாற்றப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் காங்., மாநில தலைவர் அழகிரி உள்ளார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


பாதிப்பு

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: வாரணாசி பல்கலையில், மகாகவி பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி. பாரதியார் குறித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். வேளாண் சட்டங்களால், இதுவரை யாரும் பாதிப்பு அடைந்ததாக கூறவில்லை.

தேர்தல் அறிக்கையில் கூறிய காரணத்திற்காக, இச்சட்டத்தை எதிர்த்து தி.மு.க., அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கவர்னராக பணிபுரிந்துள்ளனர்.


பேச்சுவார்த்தை

புதிய கவர்னர் ரவி, நாகாலாந்தில் பேச்சுவார்த்தையை திறமையாக செயல்படுத்தினார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X