தமிழ்நாடு

மக்களே விரும்பும் குடியிருப்புகள்: வீட்டு வசதி துறை அமைச்சர் உறுதி

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை : ''வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை, மக்களே விரும்பி வந்து குடியேறும் வகையில் தரமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.சென்னை, ராமாபுரம்,பாரதி சாலையில் தமிழக வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, 384 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு, சுயநிதி பிரிவு வாயிலாக கட்டப்பட்டு, 2019ம் ஆண்டு பயனாளிகளிடம்
 மக்களே விரும்பும் குடியிருப்புகள்: வீட்டு வசதி துறை அமைச்சர் உறுதி

சென்னை : ''வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை, மக்களே விரும்பி வந்து குடியேறும் வகையில் தரமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

சென்னை, ராமாபுரம்,பாரதி சாலையில் தமிழக வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, 384 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு, சுயநிதி பிரிவு வாயிலாக கட்டப்பட்டு, 2019ம் ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.குடிநீர், கழிவு நீர் பிரச்னை, தொட்டாலே சிமென்ட் பூச்சு உதிர்வது என, பல்வேறு பிரச்னைகளை வீட்டு உரிமையாளர்கள் முன் வைத்தனர். இதையடுத்து, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி மற்றும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர், கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, எம்.பி., டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.,க்கள் கணபதி, பிரபாகர் ராஜா மற்றும் வீட்டுவசதி வாரிய துறை அதிகாரிகள் அங்கு நேற்று ஆய்வு செய்தனர்.இது குறித்து, அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ள குறைகள் குறித்து, புகார்கள் வந்தன. முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.இந்த கட்டடங்களை யார் கட்டினார்கள்; எப்போது கட்டப்பட்டது என, பார்க்க வேண்டாம்.

புகார் வந்தால் உடனடியாக ஆய்வு செய்து, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் தெரிவித்து உள்ளார்.பழைய கட்டடங்கள், புதிய கட்டடங்கள், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து, ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் மட்டுமன்றி, மூன்றாம் நபர்கள் வாயிலாக கண்காணித்து ஆய்வு செய்யப்படும்.வீட்டுவசதி வாரிய குடியிருப்பு என்றாலே, நம்பிக்கையின்றி பொதுமக்கள் ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்.

இந்நிலையை மாற்றி, மக்களே விரும்பி வந்து குடியேறும் அளவுக்கு, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தரமாக கட்டப்படும்.கட்டடங்கள் கட்டும் அதிகாரிகள் மட்டுமன்றி, ஒப்பந்ததாரர்களும் கவனமாக இருக்க வேண்டும். சரியாக செய்யவில்லை என்றால் ஒப்பந்ததாரர்களுக்கு இங்கு இடமில்லை.ராமாபுரம் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள்தெரிவித்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X