பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் நியமன விவகாரம் அரசை கண்டித்து போராட்டம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
வள்ளுவர்கோட்டம் : 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, தமிழக அரசு, கோவில்களில் அர்ச்சகர்களை நியமித்துள்ளது' என, அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், நேற்று அறப்போராட்டம் நடந்தது.சென்னை, வள்ளுவர்கோட்டத்தில், தமிழக அரசை கண்டித்து, அந்தணர் முன்னேற்ற கழக தலைவர் ஜெயபிரகாஷ் சார்பில் அறப்போராட்டம் நடந்தது.பின், ஜெயபிரகாஷ் பேசியதாவது:ஆகம விதிகளைப் பின்பற்றி, கோவில்களில்
 அர்ச்சகர் நியமன விவகாரம் அரசை கண்டித்து போராட்டம்

வள்ளுவர்கோட்டம் : 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, தமிழக அரசு, கோவில்களில் அர்ச்சகர்களை நியமித்துள்ளது' என, அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், நேற்று அறப்போராட்டம் நடந்தது.

சென்னை, வள்ளுவர்கோட்டத்தில், தமிழக அரசை கண்டித்து, அந்தணர் முன்னேற்ற கழக தலைவர் ஜெயபிரகாஷ் சார்பில் அறப்போராட்டம் நடந்தது.பின், ஜெயபிரகாஷ் பேசியதாவது:ஆகம விதிகளைப் பின்பற்றி, கோவில்களில் பூஜைகள் நடக்க வேண்டும். அதேபோல்,'கோவில்களில், ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம் இருக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.

அந்த தீர்ப்பை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, ஹிந்து சமய அறநிலையத்துறை, அர்ச்சகர்களை நியமனம் செய்துள்ளது. விதிமீறி பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் நியமன அரசாணையை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் தொடர வேண்டும் மற்றும் அந்தணர் வாரியம் அமைக்க வேண்டும். ஆலய பூஜை முறைகளில், ஹிந்து சமய அறநிலையத் துறை தலையிடக் கூடாது.இவ்வாறு, அவர் பேசினார். இந்த அறப்போரட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X