சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனத்தில் தீ விபத்து 10க்கும் மேற்பட்ட 'இ -- பைக்' நாசம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரவாயல் : தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 10க்கும் மேற்பட்ட 'இ -- பைக்'குகள் எரிந்து நாசமாயின..சென்னை, வானகரம், முஸ்தபா தெருவில் உள்ள நிறுவனத்தில், இ -- பைக் சரி செய்வது மற்றும் 'சோலார்' பேனல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை, இந்நிறுவனத்தில் இருந்து புகை வெளிவருவதை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதற்குள் தீ கொழுந்து

மதுரவாயல் : தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 10க்கும் மேற்பட்ட 'இ -- பைக்'குகள் எரிந்து நாசமாயின..
சென்னை, வானகரம், முஸ்தபா தெருவில் உள்ள நிறுவனத்தில், இ -- பைக் சரி செய்வது மற்றும் 'சோலார்' பேனல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை, இந்நிறுவனத்தில் இருந்து புகை வெளிவருவதை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதற்குள் தீ கொழுந்து விட்டெரிய துவங்கியது. கோயம்பேடு, பூந்தமல்லி, மதுரவாயல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், கம்பெனியின் உரிமையாளர் வராததால், ஷட்டரை திறக்க முடியவில்லை.இதையடுத்து, ஜன்னல் கதவுகளை உடைத்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், அந்நிறுவனத்தில் இருந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட இ -- பைக்குகள் தீக்கிரையாயின.உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், அருகில் இருந்த நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X