பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு பாராட்டு

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை, போலீஸ் கமிஷனர்சங்கர் ஜிவால் பாராட்டினார்..சென்னை, கீழ்ப்பாக்கம் அருகே, மாநகர பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, பணியில் இருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அப்போது, ரோந்து வாகனத்தில் இருந்த எஸ்.ஐ., யாஹியா, தாமதிக்காமல், ரோந்து வாகனத்தில் ஓட்டுனரை அழைத்து சென்று காப்பாற்றினார்.பட்டினப்பாக்கம்

சென்னை : சென்னையில், சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை, போலீஸ் கமிஷனர்சங்கர் ஜிவால் பாராட்டினார்..
சென்னை, கீழ்ப்பாக்கம் அருகே, மாநகர பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, பணியில் இருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அப்போது, ரோந்து வாகனத்தில் இருந்த எஸ்.ஐ., யாஹியா, தாமதிக்காமல், ரோந்து வாகனத்தில் ஓட்டுனரை அழைத்து சென்று காப்பாற்றினார்.பட்டினப்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த போது, சாலையில் இருந்த பள்ளங்களை, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் ஷாலினி, மகாலட்சுமி, அரசுகுமாரன் ஆகியோர் மண்ணை கொட்டி சமன் செய்தனர். இவை, சீரான போக்குவரத்துக்கு வழிவகுத்தது.திரு.வி.க.நகர் பகுதியில், தன் ஆட்டோவில், பெண் பயணி தவற விட்ட, 2 கிராம் தங்க மோதிரத்தை, உரியவரிடம், ஓட்டுனர் சாமுவேல் ஒப்படைத்தார்.இதுபோன்றுபல்வேறு வகையில், சிறப்பாக செயல்பட்ட போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X