சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெட்டுப்போன 'க்ரில்' சிக்கன் ஓட்டல் 'ஓனர்' மகனுக்கு உதை

Added : செப் 11, 2021
Share
Advertisement
மாம்பலம் : 'க்ரில் சிக்கன் சரியில்லை' என, ஓட்டல் உரிமையாளர் மகனை சரமாரியாக தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.தி.நகரைச் சேர்ந்தவர் அம்சத் அலி, 45. இவர், தி.நகர், ராமேஸ்வரம் தெருவில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது கடைக்கு, 8ம் தேதி இரவு, கோடம்பாக்கம், ராஜிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன், 20, என்பவர், க்ரில் சிக்கன் வாங்கி சென்றார்.சிறிது நேரத்தில், நண்பர்களுடன் திரும்பி

மாம்பலம் : 'க்ரில் சிக்கன் சரியில்லை' என, ஓட்டல் உரிமையாளர் மகனை சரமாரியாக தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.

தி.நகரைச் சேர்ந்தவர் அம்சத் அலி, 45. இவர், தி.நகர், ராமேஸ்வரம் தெருவில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது கடைக்கு, 8ம் தேதி இரவு, கோடம்பாக்கம், ராஜிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன், 20, என்பவர், க்ரில் சிக்கன் வாங்கி சென்றார்.சிறிது நேரத்தில், நண்பர்களுடன் திரும்பி வந்த ஜெகன், 'க்ரில் சிக்கன் சரியில்லை...' எனக் கூறி திருப்பி கொடுத்தார். ஓட்டல் நிர்வாகம் சார்பில், அதற்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.

அப்போது, ஓட்டல் உரிமையாளர் மகன் முகமது ஹர்ஷத், 18, மற்றும் ஜெகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஜெகன், அருகில் இருந்த கல்லால் முகமது ஹர்ஷத்தை தாக்கியுள்ளார். மேலும், அவருடன் வந்தவர்களும் முகமது ஹர்ஷத்தை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த முகமது ஹர்ஷத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது தலையில் மூன்று தையல் போடப்பட்டது.இது குறித்த புகாரைஅடுத்து, ஜெகனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெகன், தி.மு.க., பிரமுகர் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், ஜெகன் தன் நண்பர்களுடன் முகமது ஹர்ஷத்தை தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X