பொது செய்தி

தமிழ்நாடு

ஒருமுறை பார்த்தால் ஓவியமாகும் தனித்திறனில் அசத்தும் பள்ளி மாணவர்

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் 5ம் வகுப்பு மாணவர் தனித்திறமைகளால் அசத்தி வருகிறார். ஆண்டிபட்டி கொண்ட மநாயக்கன்பட்டி கமலநாதன் - நித்யாதேவி மகன் ஜனாதன் 10, இங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவர் படிப்புடன் ஓவியம் வரைதல், கிளே, களிமண் பொம்மைகள் செய்தல், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல் என பல தனித்திறன்களை கொண்டுள்ளார். வீட்டில் ஓய்வு நேரத்தில் வெள்ளை

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் 5ம் வகுப்பு மாணவர் தனித்திறமைகளால் அசத்தி வருகிறார். ஆண்டிபட்டி கொண்ட மநாயக்கன்பட்டி கமலநாதன் - நித்யாதேவி மகன் ஜனாதன் 10, இங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவர் படிப்புடன் ஓவியம் வரைதல், கிளே, களிமண் பொம்மைகள் செய்தல், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல் என பல தனித்திறன்களை கொண்டுள்ளார். வீட்டில் ஓய்வு நேரத்தில் வெள்ளை தாளில் தன் மனதிற்கு பிடித்த படங்களை கற்பனை திறனில் வரைந்து வைத்துள்ளார். 'கிளே' களிமண் இவற்றைக்கொண்டு விலங்குகள், பொம்மைகள் செய்து பத்திரப்படுத்தியுள்ளார்.ஜனாதன் மழலைப்பேச்சில் கூறியதாவது: எல்.கே.ஜி., படிக்கும்போதே படம் வரைவதில் ஆர்வம். பள்ளியில் ஓவிய போட்டியில் பங்கேற்று பிடித்த படங்களை வரைவேன். பள்ளியில் நான் வரைந்த ஓவியங்களை மாதிரிக்கு எடுத்து கொள்வார்கள். நண்பருடன் விளையாடுவதற்காக விநாயகர் சிலைகள் செய்வேன். அதனை சிறு வண்டியில் வைத்து விளையாடுவோம். மீன்பிடித்தல், தோட்டம், அரண்மனை, ஸ்பைடர் மேன், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பார்க்காமலேயே வரைவேன். ஒரு முறை பார்த்ததை மனதில் நிறுத்தி படமாக வரைய முடியும். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் பாட்டி அதிக நேரம் என்னுடன் இருந்து நல்ல ஊக்கம் தருவார். இவரின் முயற்சியை பாராட்ட 94420 58549 ஹலோ சொல்லுங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X