பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயி உருவாக்கிய பனை மரக்காடு

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே, விவசாயி ஒருவர், பனை மரக்காடு உருவாக்கியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, 65 விவசாயி. இவர் 37 ஆண்டுகளுக்கு முன், இளைஞர்களை ஒன்றிணைத்து, கிராமத்தில் உள்ள பாண்டிக்குளத்தை சுற்றி, பல ஆயிரக்கணக்கான பனை விதைகளை நடவு செய்தார்.எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், எதிர்கால சந்ததிகளை
 விவசாயி உருவாக்கிய பனை மரக்காடு

புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே, விவசாயி ஒருவர், பனை மரக்காடு உருவாக்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, 65 விவசாயி. இவர் 37 ஆண்டுகளுக்கு முன், இளைஞர்களை ஒன்றிணைத்து, கிராமத்தில் உள்ள பாண்டிக்குளத்தை சுற்றி, பல ஆயிரக்கணக்கான பனை விதைகளை நடவு செய்தார்.

எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு, கிராமத்தில் உள்ள பொது இடத்தில் அவர்கள் விதைத்த பனை விதைகள், தற்போது விருட்சமாக உருவெடுத்து, பனை மரக்காடாக காட்சியளிக்கிறது.அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, பனை சார்ந்த தொழிலை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X