தமிழ்நாடு

முடிவு : நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க.. நாராயணத்தேவன்பட்டியில் விரைவில் துவங்கும்

Updated : செப் 12, 2021 | Added : செப் 11, 2021
Share
Advertisement
கம்பம்-நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்தில் மின் உற்பத்தி செய்ய மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.மேகமலையில், ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு சிறு,சிறு அணைகள் உள்ளன. இதில் ைஹவேவிஸ் அணையில் சேகரமாகும் நீரை குகை வழியாக மணலாறு, வெண்ணியாறு கொண்டு சென்று அங்கிருந்த இரவங்கலாறு அணையில் நீரை தேக்குகின்றனர். இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீரை 759 மீட்டர் உயரத்திற்கு பைப்
 முடிவு :  நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க..  நாராயணத்தேவன்பட்டியில் விரைவில் துவங்கும்

கம்பம்-நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்தில் மின் உற்பத்தி செய்ய மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மேகமலையில், ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு சிறு,சிறு அணைகள் உள்ளன. இதில் ைஹவேவிஸ் அணையில் சேகரமாகும் நீரை குகை வழியாக மணலாறு, வெண்ணியாறு கொண்டு சென்று அங்கிருந்த இரவங்கலாறு அணையில் நீரை தேக்குகின்றனர். இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீரை 759 மீட்டர் உயரத்திற்கு பைப் மூலம் தண்ணீர் கீழே கொண்டு செல்லப்பட்டு, சுருளியாறு மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் இந்த அணைகளில் சேகரமாகும் தண்ணீரை பயன்படுத்தி வேறு இடங்களில் மின் உற்பத்திக்கு வாய்ப்பு உள்ளதா என்று பல்வேறு மட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.சில ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேகமலையில் உள்ள மணலாறு அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீரை இறக்கி மின் உற்பத்தி செய்துவிட்டு, பின்னர் மறுபடியும் குழாய் மூலம் தண்ணீரை மேகமலைக்கு ஏற்றி இரவங்கலாறு அணை கொண்டு செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செப். 7 ல் அறிவித்துள்ளார். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X