பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் வெள்ள மீட்பு ஒத்திகை

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை : தாம்பரம் சிட்லப்பாக்கம் ஏரி உள்ளிட்ட இடங்களில், தீயணைப்பு துறை சார்பில், வெள்ள மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.தாம்பரம், கிண்டி தீயணைப்பு துறை சார்பில், தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில், வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது. அப்போது, வெள்ள பாதிப்பின் போது, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்
 நீர்நிலைகளில் வெள்ள மீட்பு ஒத்திகை

சென்னை : தாம்பரம் சிட்லப்பாக்கம் ஏரி உள்ளிட்ட இடங்களில், தீயணைப்பு துறை சார்பில், வெள்ள மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

தாம்பரம், கிண்டி தீயணைப்பு துறை சார்பில், தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில், வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது. அப்போது, வெள்ள பாதிப்பின் போது, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தீயணைப்புத் துறையில் உள்ள ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட் ஆகியவற்றை கொண்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.அதேபோல், கொருக்குப் பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முனுசாமி தலைமையில், 10க்கும் மேற்பட்ட வீரர்கள், வெள்ள மீட்பு ஒத்திகையை, பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்..
குடியிருப்புகளில் திடீர் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள சிறிய வாட்டர் கேன், பெரிய தண்ணீர் கேன் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை பயன்படுத்தி, உதவிகள் கிடைப்பதற்கு முன்பாக, தங்களை தாங்களே எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என, எடுத்துரைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X