கும்பக்கரை திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரை திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : செப் 11, 2021
Share
பெரியகுளம்-கும்பக்கரை அருவி திறக்காததால் தினமும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. நீர் பிடிப்பு பகுதியில் இம்மாதம் முதல் சாரலாகவும்,அவ்வப்போது கனமழையும் பெய்தது.இதனால் அருவியில் நீர் வரத்து சீராக உள்ளது. ஏப்ரலில் கொரோனா தடுப்பிற்காக கும்பக்கரைக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.

பெரியகுளம்-கும்பக்கரை அருவி திறக்காததால் தினமும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. நீர் பிடிப்பு பகுதியில் இம்மாதம் முதல் சாரலாகவும்,அவ்வப்போது கனமழையும் பெய்தது.இதனால் அருவியில் நீர் வரத்து சீராக உள்ளது. ஏப்ரலில் கொரோனா தடுப்பிற்காக கும்பக்கரைக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. ஊரடங்கு தளர்வால் வைகை அணை சுற்றுலா தலம் திறந்த நிலையில் கும்பக்கரை அருவி திறப்பு தாமதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கருத்து.அனுமதியில்லைஆர்.ராஜேஷ், மதுரை: உறவினர் திருமணத்திற்கு பெரியகுளம் வந்தோம். நேற்று வைகைஅணையை சுற்றி பார்த்துவிட்டு கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்தோம்அனுமதியில்லை. முக்கிய சுற்றுலா தலமான வைகை அணை திறக்கப்பட்ட நிலையில், கும்பக்கரை திறக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.திறக்க வேண்டும்ஆர்.கீதா, மதுரை: கும்பக்கரை அருவி திறக்காதது பற்றி நுழைவுப்பகுதியில் அறிவிப்பும் இல்லை.இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். வனத்துறை போர்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும். கும்பக்கரை அருவியை சுற்றியுள்ள இயற்கை அழகை பார்க்க கூட அனுமதி மறுக்கின்றனர்.விரைவில் திறக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X