திருப்பூர் மாநகராட்சியில் 138 இடங்களில் தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாநகராட்சியில் 138 இடங்களில் தடுப்பூசி

Added : செப் 11, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 138 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்கூறியதாவது:மாநகராட்சியில் நாளை (இன்று) காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை கொரோனாதடுப்பூசி 'மெகா' முகாம் நடக்கிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள பள்ளிகள், கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என, 138 இடங்களில், 45 ஆயிரம்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 138 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்கூறியதாவது:மாநகராட்சியில் நாளை (இன்று) காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை கொரோனாதடுப்பூசி 'மெகா' முகாம் நடக்கிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள பள்ளிகள், கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என, 138 இடங்களில், 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இப்பணியில், 700க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். தொழிற்துறையினருக்கான சிறப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, மாநகராட்சி சார்பில், 3 லட்சத்து, 22 ஆயிரம், என 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2,500 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்றுதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், அருகே நடக்கும் முகாம்களுக்கு சென்று முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X