பல்லடத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு

Added : செப் 11, 2021
Share
பல்லடம்:பல்லடம் தாலுகாவில், இன்று நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில், 8 ஆயிரம் பேருக்குஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பல்லடம் நகராட்சி, மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 30 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஆயிரத்துக்கும்

பல்லடம்:பல்லடம் தாலுகாவில், இன்று நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில், 8 ஆயிரம் பேருக்குஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பல்லடம் நகராட்சி, மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 30 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாமை ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளனர்.பல்லடம் நகராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அரசு கலைக்கல்லுாரியில் முகாம் நடக்கிறது. ஒன்றிய பகுதிகளான, கணபதிபாளையம், அருள்புரம் ஆகியவற்றிலுள்ள பள்ளிகள்.கள்ளக்கிணறு - சுலோச்சனா மில், மல்லேகவுண்டம்பாளையம் - ஆதி லட்சுமி மில், அருள்புரம் - டி2டி இன்டர்நேஷனல், சரண் கார்மென்ட்ஸ், சேகாம்பாளையம் - சாகி எக்ஸ்போர்ட்ஸ்.ராயர்பாளையம் - முருகன் மில், காளிவேலம்பட்டி - ஹைடெக் பார்க், மங்கலம் ரோடு - கே.பி.டெக்ஸ், பருவாய் - பண்ணாரி அம்மன் மில். காளிவேலம்பட்டி பிரிவு - கொங்கு வேளாளர் மண்டபம், மகாலட்சுமி நகர் - ஜே.ஜி., ஹொசைரீஸ், சாமளாபுரம் - பேரூராட்சி அலுவலகம்.அறிவொளி நகர் - மினி கிளினிக், காளிபாளையம் - ரேவதி டெக்ஸ், 63 வேலம்பாளையம் - அங்காளம்மன் டெக்ஸ், தேவராயன்பாளையம் - சுவிப்ட் கார்மென்ட்ஸ், பூமலுார் - தீக் ஷா டெக்ஸ், ராசாகவுண்டம்பாளையம் - மோகன் பிரீடிங் பார்ம் பணிக்கம்பட்டி மற்றும் குங்குமபாளையம் அரசு துவக்கப்பள்ளி, பருவாய் - ஊராட்சி அலுவலகம்.இது தவிர, செம்மிபாளையம், அருள்புரம், பூமலுார், புளியம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 30 இடங்களில் இன்று 'மெகா' தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X