பெங்களூரு : கர்நாடகாவில் வரும் 15 வரை கன மழை பெய்யும். ஏழு மாவட்டங்களில், 'மஞ்சள் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத்துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. கர்நாடகாவின் பல மாவட்டங்களில், ஏற்கனவே மழை பெய்து வருகிறது. இது, வரும் 15 வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. ஷிவமொகா, மங்களூரு, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, குடகு, உடுப்பி, ஹாசன், பெங்களூரு, ரூரல், தட்சிண கன்னடா, மைசூரு, சாம்ராஜ்நகர், பீதர், கலபுரகி, விஜயபுரா, ராய்ச்சூர், யாத்கிர், தாவணகரே, கொப்பல், தார்வாட் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மலைப்பகுதி மாவட்டங்களிலும் கூட பரவலாக சாதாரண அல்லது கனமழை பெய்யலாம். பெங்களூரில் மேகமூட்டமான வானிலை நிலவுகிறது. வெப்பநிலை அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் முதல், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்ஷியஸ் உள்ளது. உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு, ஹாசன், ஷிவமொகா, உடுப்பி மாவட்டங்களில், 'மஞ்சள் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE