பொது செய்தி

தமிழ்நாடு

ஆடுகளுக்கு குடற்புழு சிகிச்சை: கால்நடை துறையினர் அறிவுரை

Added : செப் 11, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:ஆடு வளர்ப்போர் குடற்புழு பாதிப்பை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டுமென, கால்நடை பராமரிப்பு துறை அறிவுரை வழங்கியுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகளும், நிலம் இல்லாத ஏழைகளும் அதிகமாக ஆடு வளர்த்து, வருவாய் ஈட்டுகின்றனர். ஆடுகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் முக்கிய பிரச்னையாக, குடற்புழு பாதிப்பு உள்ளது.குடற்புழுக்கள்

பெ.நா.பாளையம்:ஆடு வளர்ப்போர் குடற்புழு பாதிப்பை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டுமென, கால்நடை பராமரிப்பு துறை அறிவுரை வழங்கியுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகளும், நிலம் இல்லாத ஏழைகளும் அதிகமாக ஆடு வளர்த்து, வருவாய் ஈட்டுகின்றனர். ஆடுகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் முக்கிய பிரச்னையாக, குடற்புழு பாதிப்பு உள்ளது.குடற்புழுக்கள் பாதிப்பால், ஆடுகளின் உடல் பலவீனம் அடையும். தீவனம் எடுக்க முடியாது. அதனால் அதன் வளர்ச்சி பாதித்து, உடல் எடை குறைந்து, ஆடு வளர்ப்போருக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, ஆடு வளர்ப்பவர்கள் குடற்புழு நீக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இது குறித்து, கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், 'கால்நடைகளுக்கு குடற் புழுக்களின் தாக்கம், மழை மற்றும் பனிக்காலங்களில் அதிகம் காணப்படும். குடற்புழுக்களால், குட்டிகள், பால் கொடுக்கும் ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும். ரத்த சோகையும் ஏற்படும்.கழிச்சல் உள்ள ஆடுகளின் சாணம், எவ்வகையான குடற்புழுக்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும், குடற்புழு முட்டைகளின் எண்ணிக்கையும், கால்நடை மருந்தகத்தில் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்' என்றனர்.இதுதான் அறிகுறிகள்!'குடற்புழு அறிகுறிகளாக கழித்தல், ரத்தசோகை, தாடை வீக்கம், மூக்குச்சளி மற்றும் உடல் மெலிவு ஆகியவை ஏற்படும். இந்த ஐந்து அறிகுறிகளை கொண்டு, பாதிப்பை உறுதி செய்து, கால்நடை துறையினரை அணுகி, குடற்புழு நீக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்' என்கின்றனர் கால்நடை பராமரிப்புத்துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X