தமிழ்நாடு

கண்மாயில் கலக்கும் கழிவுநீர், தேனி -- அல்லிநகரம் நகராட்சி 4வது வார்டின் அவல நிலை

Added : செப் 11, 2021
Share
Advertisement
தேனி-தேனி அல்லிநகரம் நகராட்சி 4வது வார்டில் பாண்டியன் நகர், மச்சாள் 1,2,3, 4, 5, 6வது கிராஸ் தெருக்கள், கம்பர் தெரு, இளங்கோ தெரு உள்பட 33 தெருக்கள் உள்ளன. வீடுகள் நெருக்கமாக இருக்கும் இந்த வார்டில் பாதைகள் குறுகலாகவே உள்ளன.இங்குள்ள மட்டன் ஸ்டால் வடக்கு மெயின்ரோட்டில் தண்ணீர் தொட்டி உள்ளது. இது வெறும் காட்சிப்பொருளாகவே இருக்கிறது. மச்சாள் குறுக்குத்தெருக்களில் பாதாள சாக்கடை
 கண்மாயில் கலக்கும் கழிவுநீர், தேனி -- அல்லிநகரம் நகராட்சி 4வது வார்டின் அவல நிலை

தேனி-தேனி அல்லிநகரம் நகராட்சி 4வது வார்டில் பாண்டியன் நகர், மச்சாள் 1,2,3, 4, 5, 6வது கிராஸ் தெருக்கள், கம்பர் தெரு, இளங்கோ தெரு உள்பட 33 தெருக்கள் உள்ளன. வீடுகள் நெருக்கமாக இருக்கும் இந்த வார்டில் பாதைகள் குறுகலாகவே உள்ளன.

இங்குள்ள மட்டன் ஸ்டால் வடக்கு மெயின்ரோட்டில் தண்ணீர் தொட்டி உள்ளது. இது வெறும் காட்சிப்பொருளாகவே இருக்கிறது. மச்சாள் குறுக்குத்தெருக்களில் பாதாள சாக்கடை வசதி இல்லை. சாக்கடைகள் திறந்த நிலையில் ஓடி, கழிவுநீர் நேரிடையாக அருகேயுள்ள சின்னக்குளம் கண்மாயில் கலக்கிறது. குப்பை அதிகம் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு நிலவுவதால் நோய் பரவும் அச்சம் உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

மின் இணைப்பு இல்லை காட்டுராஜன், மட்டன் ஸ்டால் மெயின்ரோடு:குடிநீர் தொட்டி 6 மாதத்துக்கும் மேலாக பயன்படாமல் உள்ளது. 50 அடியில் தண்ணீர் இருந்தும் மின்இணைப்பு, மோட்டார் வசதி இன்றி உள்ளது. இதுபற்றி நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை. இதை சரிசெய்தால் இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.கண்மாயில் கழிவு நீர் கலப்புபிச்சை ராஜ், மச்சாள் வடக்கு 3வது குறுக்குதெரு:குறுக்குத்தெருக்களில் சாக்கடை முறையாக சுத்தம் செய்யவது இல்லை.

பணியாளர் முறையாக துப்புரவு செய்வது இல்லை. இது குறித்து புகார் மனு அளித்தாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வது இல்லை. நாங்களே தான் சுத்தம் செய்து கொள்கிறோம். 40 ஆண்டுகளுக்கு முன்பு சின்னகுளம் கண்மாய் நீரை குடிநீருக்கு பயன்படுத்தினோம். தற்போது சாக்கடை கழிவுநீர் கலப்பதால் அதை பயன்படுத்த முடியாத நிலைய உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X