ரியல் எஸ்டேட் நிறுவனம் அதிக வட்டி மோசடி

Added : செப் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு : மக்களுக்கு அதிக வட்டி ஆசை காண்பித்து, 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பெங்களூரு திலக்நகரின் ஸ்வாகத் சாலையில், அப்துல் நஜீம், ஹிதாயத் உல்லா, நஜிம், ஆலிம் ஆகியோர், 'இக்ரா வெல்த் மானேஜ்மென்ட்' என்ற பெயரில், ரியல் எஸ்டேட் நிறுவனம் திறந்தனர்.இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், 15 முதல் 30 சதவீதம் வட்டி கொடுப்பதாக, ஆசை

பெங்களூரு : மக்களுக்கு அதிக வட்டி ஆசை காண்பித்து, 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரு திலக்நகரின் ஸ்வாகத் சாலையில், அப்துல் நஜீம், ஹிதாயத் உல்லா, நஜிம், ஆலிம் ஆகியோர், 'இக்ரா வெல்த் மானேஜ்மென்ட்' என்ற பெயரில், ரியல் எஸ்டேட் நிறுவனம் திறந்தனர்.இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், 15 முதல் 30 சதவீதம் வட்டி கொடுப்பதாக, ஆசை காண்பித்தனர். லாபத்தில் பங்கு கொடுப்பதாகவும் நம்ப வைத்தனர். இதை நம்பிய நுாற்றுக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆறு மாதத்துக்கு பின், ஓராண்டுக்கு பின், லாபத்தொகை கொடுப்பதாக கூறினர்.

ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும், அசலும் கொடுக்கவில்லை; வட்டியும் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்பட்டதாக, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், திலக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்துல் நஜிம், ஹிதாயத் உல்லா, நஜிம், ஆலிம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். உயர் போலீஸ் அதிகாரியொருவர் கூறியதாவது:ஏமாறுவோர் இருக்கும் வரை, ஏமாற்றுபவர் இருப்பர். முந்தைய ஆண்டு ஆயிரக்கணக்கானோர், ஐ.எம்.ஏ., நிறுவனத்தால் வீதிக்கு வந்தனர். பணத்தாசையால் நான்கு நண்பர்கள் சேர்ந்து, 'இக்ரா' பெயரில் நிறுவனம் திறந்து, மக்களிடம் பணம் வசூலித்து நாமம் போட்டுள்ளனர். விரைவில் பணக்காரராக வேண்டும்; ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக போலி நிறுவனங்கள் திறந்து, ஆசை வார்த்தை காண்பிக்கின்றனர். மக்களும் பணத்தை முதலீடு செய்து, ஏமாறுகின்றனர்.போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொது மக்களுக்கு புத்தி வருவதில்லை. இனியாவது இத்தகைய மோசடி நிறுவனங்களில், பணத்தை முதலீடு செய்து ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X