மளிகைக்கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம், 10 பவுன் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகைக்கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம், 10 பவுன் திருட்டு

Added : செப் 11, 2021
Share
கோவை:மளிகைக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் ரொக்கம், 10 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை அம்மன்குளம் அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினபாண்டி, 58. வீட்டின் ஒரு பகுதியில், மளிகைக்கடை வைத்துள்ளார். வீட்டின் மாடியில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம், துாத்துக்குடி உடன்குடியில் நடந்த உறவினரின்

கோவை:மளிகைக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் ரொக்கம், 10 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை அம்மன்குளம் அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினபாண்டி, 58. வீட்டின் ஒரு பகுதியில், மளிகைக்கடை வைத்துள்ளார். வீட்டின் மாடியில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம், துாத்துக்குடி உடன்குடியில் நடந்த உறவினரின் திருமணத்துக்கு சென்றார்.இந்நிலையில், வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள், ரத்தினபாண்டியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.தகவல் அறிந்த ரத்தினபாண்டியின் சகோதரர் பகவதி பாண்டியன், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.வீட்டின் தாழ்ப்பாளில் உள்ள ஸ்குரூக்களை கழட்டி வீட்டினுள் சென்று, பீரோவில் இருந்த மூன்று லட்சம் ரொக்கம், 10 பவுன் நகை திருடு போயிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X