சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை;இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டாய திருமணம் செய்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை பீளமேட்டை சேர்ந்த, 20 வயது பெண், பாலிடெக்னிக் படித்து வருகிறார். கடந்த ஜன., மாதம் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம், போத்தனுாரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார், 25 பழக்கமானார்.இருவரும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். கடந்த

கோவை;இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டாய திருமணம் செய்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை பீளமேட்டை சேர்ந்த, 20 வயது பெண், பாலிடெக்னிக் படித்து வருகிறார். கடந்த ஜன., மாதம் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம், போத்தனுாரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார், 25 பழக்கமானார்.இருவரும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். கடந்த மார்ச் மாதம், இளம்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து சென்ற வினோத்குமார், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை மொபைல்போனில், படம் பிடித்த வினோத்குமார், அதைப்பயன்படுத்தி இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார். இந்நிலையில் இளம்பெண் வினோத்குமாருடன் பேசுவதை தவிர்த்தார்.வினோத்குமார், மாணவியின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வினோத்குமார் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த பெண், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிழக்கு மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X