பொது செய்தி

இந்தியா

20 ஆயிரம் ரூபாய் அபராதம் பாக்கி

Added : செப் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு போக்குவரத்துப்பிரிவு, இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடாவின் விசுவாசியொருவர், இதுவரை 42 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார். 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக, அபராத தொகை பாக்கி வைத்துள்ளார். அபராதம் கேட்டால், ரவிகாந்தேகவுடாவின் பெயரை கூறி தப்புகிறார்.பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸ் பிரிவின் இணை போலீஸ் கமிஷனராக ரவிகாந்தேகவுடா பதவி

பெங்களூரு : பெங்களூரு போக்குவரத்துப்பிரிவு, இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடாவின் விசுவாசியொருவர், இதுவரை 42 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார்.

20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக, அபராத தொகை பாக்கி வைத்துள்ளார். அபராதம் கேட்டால், ரவிகாந்தேகவுடாவின் பெயரை கூறி தப்புகிறார்.பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸ் பிரிவின் இணை போலீஸ் கமிஷனராக ரவிகாந்தேகவுடா பதவி வகிக்கிறார். இவரது விசுவாசி பரமேஷ் என்பவர், கேஏ, 05, ஜெஎஸ் - 2581 பதிவு எண் கொண்ட 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் ரவிகாந்தேகவுடாவின் பெயரை மட்டுமின்றி, அவரது பதவி பெயரையும் எழுதி வைத்துள்ளார். பரமேஷ் பெங்களூரில், எந்த இடத்தில் ஸ்கூட்டரில் நடமாடினாலும், ஹெல்மெட் அணிவதில்லை. இது போன்று பல விதங்களில், 42 முறை சாலை விதிகளை மீறியுள்ளார்.ஹெல்மெட் அணியாமல் சென்றதை, போக்குவரத்து போலீசார் போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

20 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் பாக்கி வைத்துள்ளார். பலமுறை போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி, அபராத தொகையை செலுத்தும்படி கேட்ட போது, ரவி காந்தேகவுடா பெயரை கூறி, தப்பிவிடுவார். சமீபத்தில் விதிமுறை மீறிய பரமேஷ், போக்குவரத்து பிரிவு உதவி சப் -- இன்ஸ்பெக்டரிடம் சிக்கினார். அப்போதும் ரவிகாந்தேகவுடா பெயரை கூறி, நழுவிக்கொண்டார். பரமேஷ் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டுவது, சிக்னல் ஜம்ப் செய்யும் போட்டோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X