தமிழ்நாடு

வேண்டும் தூய்மை ; சுகாதார கேடுகளில் பஸ் ஸ்டாண்ட்கள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்-விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் கழிவுகள் தேக்கம், கொசுத்தொல்லை, சாக்கடைகளின் சுகாதாரக்கேடு என பல்வேறு குறைபாடுகளால், தினம்தோறும் பரிதவிக்கும் நிலையில் பயணிகள் உள்ளனர்.உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்தவர்கள் தினமும் பஸ்ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். அப்படி வருவோருக்கு வசதியாக போதிய அடிப்படை வசதிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்-விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் கழிவுகள் தேக்கம், கொசுத்தொல்லை, சாக்கடைகளின் சுகாதாரக்கேடு என பல்வேறு குறைபாடுகளால், தினம்தோறும் பரிதவிக்கும் நிலையில் பயணிகள் உள்ளனர்.

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்தவர்கள் தினமும் பஸ்ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். அப்படி வருவோருக்கு வசதியாக போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. சுகாதார வளாகங்கள் சுத்தமில்லாமல் காணப்படுகிறது. இருக்கைகள் சேதம் அடைந்து இருப்பதால் உட்கார முடியாமல் நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. அடிக்கடி அப்புறப்படுத்தாத கடைகளின் கழிவுகள் அருவருப்பை ஏற்படுத்துகிறது. சாக்கடைகள் தேக்கத்தால் உருவாகும் கொசுக்கடியால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.பஸ்கள் நிற்கும் இடத்தில் சுகாதாரக்கேடால் பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு தான் நிற்க வேண்டியுள்ளது.

கட்டண கழிப்பிடமோ நோய் பரப்பும் மையமாக உள்ளது. குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறையும் இந்நிலையிலே உள்ளது.தினமும் இரவு 10 :00மணிக்கு மேல் துாய்மைப்பணி நடந்தாலும் மறுநாள் காலை 10:00 மணிக்கு மேல் கழிவுகள் அதிகரித்து விடுகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள்தான் அக்கறையுடன் சரி செய்ய வேண்டும்........துாய்மையே பெருமைபஸ் ஸ்டாண்ட்களில் தினமும் உள்ளாட்சிகள் மூலம் துாய்மைப் பணி நடந்தாலும் 24 மணிநேரத்தில் கழிவுகள் அதிகரித்து ஆங்காங்கே பரவிக் கிடக்கிறது.

அடிக்கடி தூய்மைப் பணி செய்ய வேண்டும். காலை 6 :00மணி முதல் இரவு 10:00 மணிக்குள் தினமும் 3 தடவையாவது சுத்தம் செய்ய வேண்டும். துாய்மையே நகருக்கு பெருமை என்பதை உள்ளாட்சி நிர்வாகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.- ராஜசேகர், சமூக ஆர்வலர், ஸ்ரீவில்லிபுத்துார்.............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X