பொது செய்தி

தமிழ்நாடு

நறுமண வாரிய கட்டுப்பாட்டில் விலகுகிறது ஏலக்காய் வர்த்தகம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கம்பம்:ஆன்-லைன் வர்த்தத்தில் ஏலக்காய் விற்பனை அதிகரிப்பதால் 'நறுமணப் பொருள்கள் வாரியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து ஏலக்காய் வர்த்தகம் விலகும் நிலை எழுந்துள்ளது.இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் விற்பனை போடி, கேரளா புத்தடி ஸ்பைசஸ் போர்டின் மின்னணு ஏல மையங்களில் பதிவு செய்து விற்பனை செய்ய முடியும். நறுமண வாரியத்தில் பல கோடி ரூபாய் டெபாசிட்

கம்பம்:ஆன்-லைன் வர்த்தத்தில் ஏலக்காய் விற்பனை அதிகரிப்பதால் 'நறுமணப் பொருள்கள் வாரியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து ஏலக்காய் வர்த்தகம் விலகும் நிலை எழுந்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் விற்பனை போடி, கேரளா புத்தடி ஸ்பைசஸ் போர்டின் மின்னணு ஏல மையங்களில் பதிவு செய்து விற்பனை செய்ய முடியும். நறுமண வாரியத்தில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்து, அனுமதியை ஏல நிறுவனங்கள் பெற வேண்டும்.

கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், நறுமண வாரியத்தில் லைசென்ஸ் பெற வேண்டும். ஏலக்காய் விற்பனை செய்த 14 நாட்களில் சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் பணம் பட்டுவாடா செய்யும். வியாபாரிகள் ஏல நிறுவனத்திடமே பணம் வழங்குவார்கள். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு கிடையாது.


ஆன்-லைன் வர்த்தகம்

ஆனால் சமீபத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்தது. நறுமணவாரியத்தில் அங்கீகாரம் பெற்ற ஏல நிறுவனங்கள் ஆன்லைன் ஏலக்காய் வர்த்தகத்தை துவங்கியுள்ளன. அனைத்து ஏல நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளன. மின்னணு ஏல மையத்தில் வர்த்தகம், நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் நடக்கும்.

ஆனால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லை. நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ஏலக்காய் வர்த்தக கட்டுப்பாடு விலகுகிறது. இது தங்களுக்கு பலன்தருமா என்பது இனிதான் தெரியும் என்கின்றனர் விவசாயிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X