பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் வாகனம் இயக்க 'சேப்டி எய்டு'

Added : செப் 11, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை; இன்றைய நவீன உலகத்தில் இளைய சமுதாயத்தினர் பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டியுள்ளது. பள்ளி மாணவர்களும் படிப்பு மட்டும் அல்லாமல் மற்ற துறைகளிலும் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 'அட்ல் டிங்கரிங் லேப்' என்ற திட்டத்தை குறிப்பட்ட பள்ளிகளை

அருப்புக்கோட்டை; இன்றைய நவீன உலகத்தில் இளைய சமுதாயத்தினர் பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டியுள்ளது.

பள்ளி மாணவர்களும் படிப்பு மட்டும் அல்லாமல் மற்ற துறைகளிலும் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 'அட்ல் டிங்கரிங் லேப்' என்ற திட்டத்தை குறிப்பட்ட பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கு படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்கள் அறிவியல் திறனை ஊக்கும் விக்கும் வகையிலும் பயிற்சி தருகிறது.அந்தவகையில் தேர்வான அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி 9,10,11 ம் வகுப்பு மாணவிகள் பலவித புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்து அசத்துகின்றனர். ஸ்மார்ட் ஷாப்பிங் டிராலி, அக்ரிகல்சுரல் ரோபோட், வுமன் சேப்டி டூல், பிஷர்மேன் அலர்ட் டிரோன், ஆட்டோமேட்டிக் சானிடைசிங் டிஸ்பென்சர், இருசக்கர வாகனத்தில் சேப்டி எய்டு போன்றவைகளை கண்டுபிடித்து தேசிய அளவில் பரிசுகளையும் வென்றுள்ளனர்.தற்போது இப்பள்ளி மாணவிகள் ஐஸ்வர்யலட்சுமி, ரம்யா, மதுமிதா இணைந்து, செவி திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகள் எளிதில் இருசக்கர வாகனத்தை இயக்க 'சேப்டி எய்டு' கண்டு பிடித்துள்ளனர்.

பொதுவாக செவிதிறன் குறைபாடுடையவர்கள் 'ஹியரிங் எய்டு' காதில் வைத்து கொண்டு தான் இருசக்கர வாகனங்களை இயக்குவர்.பின்னால் வரும் வாகனங்கள் ஹாரன் அடிக்கும் போது காதில் விசில் அடிப்பது போன்ற உணர்வுடன் தலைவலியும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாணவிகளின் புதிய கண்டு பிடிப்பு கருவியை இருசக்கர வாகனத்தின் பின்புறம், முன்புறம் பொருத்தி கொள்ள வேண்டும்.பின்னால் வரும் வாகனத்தை கருவி அதிர்வுகள் மூலம் உணர்த்தும். வாகனம் இடதுபுறமாக வரும் போது இடதுபக்க கைப்பிடி (ஹேண்டில் பார்) , வலது பக்கம் வரும் போது வலபக்க கைப்பிடியில் அதிர்வு ஏற்படும். டிராபிக்கில் நீண்ட நேரம் நின்றால் கருவியை கட்டுப்படுத்த ஆன், ஆப் சுவிட்ச் உள்ளது. இக்கருவியை பயன்படுத்தி செவிகுறைபாடுடைய மாற்று திறனாளிகள், தைரியமாகவும், நம்பிகையுடனும் வாகனத்தை ஓட்ட முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X