டும் டும் டும்...இதனால எல்லாருக்கும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டும் டும் டும்...இதனால எல்லாருக்கும்

Added : செப் 11, 2021
Share
பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில் இன்று நடக்கும் 'மெகா' தடுப்பூசி முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி ஊராட்சி நிர்வாகம், 'தண்டோரா' போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டது.கோவை மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி,
 'டும் டும் டும்...இதனால எல்லாருக்கும்

பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில் இன்று நடக்கும் 'மெகா' தடுப்பூசி முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி ஊராட்சி நிர்வாகம், 'தண்டோரா' போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டது.கோவை மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உட்பட்ட பகுதிகளில் பள்ளி, சமுதாயக் கூடங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் முகாம் நடக்கிறது.சின்னதடாகம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, முக்கிய வீதிகளில் தண்டோரா போட்டு பிரசாரம் நடந்து வருகிறது.இதேபோல, சோமையம்பாளையத்திலும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில், தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சி சார்பில், நாயக்கன் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் பஸ் ஸ்டாண்ட், கோவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராயரூத்பதி சமுதாயக்கூடம், திருமாலூர் விநாயகர் கோவில், குஜ்ஜூர்பதி அங்கன்வாடி மையம், மாங்குழி அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் காலை, 7:00 முதல் மாலை, 7:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது.18 வயது நிரம்பிய அனைத்து பொதுமக்களும், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X