பள்ளி கட்டடத்தில் ரேஷன் கடை தவியாய் தவிக்கும் மீனாட்சிபுரம் மக்கள்| Dinamalar

பள்ளி கட்டடத்தில் ரேஷன் கடை தவியாய் தவிக்கும் மீனாட்சிபுரம் மக்கள்

Added : செப் 11, 2021
Share
காரியாபட்டி-பள்ளி கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை, தண்ணீர் பற்றாக்குறை என காரியாபட்டி மீனாட்சிபுரம் மக்கள் சிரமப்படுகின்றனர்.இப்பகுதியில் சாக்கடை வசதி கிடையாது. இருந்த ஒரு சாக்கடையிலும் குப்பை நிறைந்து மண் மேவி, கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளுக்கு முன் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. இரவு நேரங்களில்

காரியாபட்டி-பள்ளி கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை, தண்ணீர் பற்றாக்குறை என காரியாபட்டி மீனாட்சிபுரம் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இப்பகுதியில் சாக்கடை வசதி கிடையாது. இருந்த ஒரு சாக்கடையிலும் குப்பை நிறைந்து மண் மேவி, கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளுக்கு முன் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. இரவு நேரங்களில் மக்கள் நிம்மதியாக துாங்க முடியவில்லை. இரு இடங்களில் புழக்கத்திற்காக தரைதள தொட்டி அமைத்தும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. நீண்ட துாரத்திலிருந்து வந்து தண்ணீர் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் வயதானவர்கள் தண்ணீர் பிடிக்க சிரமப்படுகின்றனர்.ஒரே ஒரு தெருவில் மட்டும் சிமென்ட் ரோடு போடப்பட்டது. மற்ற தெருக்களில் சிமென்ட் ரோடோ, பேவர் பிளாக் கற்களோ பதிக்கவில்லை. மழை நேரங்களில் சகதியாகி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். ரேஷன் கடைக்கு நிரந்தர கட்டடம் இல்லை. பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு போதிய அடிப்படை வசதிகளும் கிடையாது. பழுதடைந்த கட்டடமாக இருப்பதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X