பொது செய்தி

இந்தியா

சிக்னல் இல்லாத போக்குவரத்து வசதி

Added : செப் 11, 2021
Share
Advertisement
ராஜாஜி நகர் : சிக்னல் இல்லா போக்குவரத்து வசதிக்காக ஆறு ஆண்டுகளுக்கு பின், ராஜாஜிநகர், சிவாநகரில் நடந்து வரும் மேம்பால பணிகள், 95 சதவீதம் முடிந்துள்ளன. இன்னும் 15 - 20 நாட்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.பெங்களூரு ராஜாஜிநகர் கார்டு சாலையில், சிக்னல் இல்லா போக்குவரத்து வசதிக்காக மூன்று மேம்பாலங்கள், ஒரு தடுப்பு சுவர் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.இதில்,

ராஜாஜி நகர் : சிக்னல் இல்லா போக்குவரத்து வசதிக்காக ஆறு ஆண்டுகளுக்கு பின், ராஜாஜிநகர், சிவாநகரில் நடந்து வரும் மேம்பால பணிகள், 95 சதவீதம் முடிந்துள்ளன.

இன்னும் 15 - 20 நாட்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.பெங்களூரு ராஜாஜிநகர் கார்டு சாலையில், சிக்னல் இல்லா போக்குவரத்து வசதிக்காக மூன்று மேம்பாலங்கள், ஒரு தடுப்பு சுவர் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.இதில், மஞ்சுநாதா நகர் முக்கிய சாலையின் இரட்டை வழி மேம்பாலம், 2018, ஆகஸ்ட் 27ல், பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பசவேஸ்வரநகர் முக்கிய சாலையில் 45 மீட்டர் துாரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் முடிந்தது.சிவாநகர் 8 வது மற்றும் முதலாம் முக்கிய சாலையின் இரட்டை வழி மேம்பாலம், பசவேஸ்வரநகர் முக்கிய சாலையில் ஒரு வழி மேம்பாலம் அமைக்கப்படுகின்றன. இந்த பணி பல ஆறு ஆண்டுகளாக தாமதமாகி வருவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர்குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதற்கு, ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் முகநுாலில் விளக்கம் அளித்துள்ளார். பல தொழில்நுட்ப பிரச்னைகள், கொரோனா ஊரடங்கு ஆகியவை குறித்து குறிப்பிட்டு, தாமத காரணங்களை விளக்கியுள்ளார்.மேலும், சிவாநகரில் நடந்து வரும் மேம்பால பணிகள் 95 சதவீதம் முடிந்திருப்பதாகவும், இன்னும் 15 - 20 நாட்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். பணிகள் நடக்கும் இடத்தையும் ஆய்வு செய்து விரைவாக முடிக்க வேண்டும்..பசவேஸ்வரநகர் முக்கிய சாலையில் ஒரு வழி மேம்பால பணியும் வேகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X