பொது செய்தி

தமிழ்நாடு

பாரதி குறித்த படிப்புகள் அறிமுகம் 

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவை பாரதியார் பல்கலையில், பாரதி குறித்த மூன்று பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'பாரதிக்கு பின் பாரதி, மகாகவி பாரதி - வாழ்வியலும் படைப்பியலும்' என்ற தலைப்புகளில் ஓராண்டு பட்டயப் படிப்பும், மகாகவி பாரதியார் அடிப்படை ஆறு மாத சான்றிதழ் படிப்பும், நடப்பு கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டுள்ளன. ஆறு மாத சான்றிதழ் படிப்பில் சேர, தமிழில்

கோவை:கோவை பாரதியார் பல்கலையில், பாரதி குறித்த மூன்று பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

'பாரதிக்கு பின் பாரதி, மகாகவி பாரதி - வாழ்வியலும் படைப்பியலும்' என்ற தலைப்புகளில் ஓராண்டு பட்டயப் படிப்பும், மகாகவி பாரதியார் அடிப்படை ஆறு மாத சான்றிதழ் படிப்பும், நடப்பு கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டுள்ளன. ஆறு மாத சான்றிதழ் படிப்பில் சேர, தமிழில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஓராண்டு பட்டயப் படிப்புக்கு அடிப்படை சான்றிதழ் படிப்பு தேர்ச்சி அல்லது இளநிலை தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலையின் பாரதியார் உயராய்வு மைய இயக்குனர் சித்ரா கூறியதாவது:இப்படிப்புகள் தனிப்பட்ட வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. பாரதியை அனைவரும் வாசித்து அறிய வகை செய்தல், மனித உணர்வுகளில் நேயத்தையும், நேர்முக சிந்தனையையும் வளர செய்தல், மாணவர்கள் மத்தியில் ஆளுமையை வளர்த்தல் என்பதே இதன் நோக்கம். பாரதியை அறிய விரும்புவோர் இதில் சேர்ந்து படிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X