பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனை கூடத்தில் இ--நாம்: கலெக்டர் ஆய்வு

Added : செப் 12, 2021
Share
Advertisement
விருதுநகர்--விருதுநகர் விற்பனை குழு கூடத்தில் செயல்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தையை(இ---நாம்) கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.இதை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: இ--நாம் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலையுடன் ,ஆன்லைன் வாயிலாக வெளிப்படையான போட்டி ஏலமுறை உருவாக்கப்படுகிறது. விருதுநகர், ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்னணு தேசிய வேளாண் சந்தையில்

விருதுநகர்--விருதுநகர் விற்பனை குழு கூடத்தில் செயல்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தையை(இ---நாம்) கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.இதை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: இ--நாம் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலையுடன் ,ஆன்லைன் வாயிலாக வெளிப்படையான போட்டி ஏலமுறை உருவாக்கப்படுகிறது. விருதுநகர், ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இன்டர்நெட் இணைப்பு 10 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் உள்ளது. மின்னணு ஏலக்கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.வேளாண் விளைபொருட்களுக்கான இயந்திரங்கள், மக்காச்சோளம் தரம் பிரிக்கும் இயந்திரம், தேங்காய் நார் உரிக்கும் இயந்திரம், ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், பயறுதரம் பிரிக்கும் இயந்திரம், மிளகாய் துாள் அரவை இயந்திரம் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் பொருத்தும் பணி நடந்து வருகிறது.இரு மின்னணு தேசிய வேளாண் சந்தைகளில் 1098 விவசாயிகள், 103 வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டு ரூ.33.99 லட்சம் மதிப்புள்ள 1334.51 குவிண்டால் வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நுாறு விவசாயிகள், 19 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர், என்றார்.வேளாண் நேர்முக உதவியாளர் சங்கர்.எஸ்.நாராயணன், வேளாண் வணிக துணை இயக்குனர் சரஸ்வதி, விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X