அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன்: துரைமுருகன் ஆவேசம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
வேலுார்:''கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு, மளிகை பொருட்களை தொண்டு நிறுவனங்கள் இலவசமாக வழங்க வேண்டும்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னையில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முகாமை துவங்கி வைத்து, தடுப்பூசி போட்டு கொண்ட

வேலுார்:''கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு, மளிகை பொருட்களை தொண்டு நிறுவனங்கள் இலவசமாக வழங்க வேண்டும்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னையில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முகாமை துவங்கி வைத்து, தடுப்பூசி போட்டு கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில், இலவசமாக தரப்பட்ட மளிகை பொருட்களை வழங்கி பேசியதாவது:

எனக்கு கூட கொரோனா வந்தது. தேர்தல் நேரத்திற்கு முன்னால், தடுப்பூசி போட்டு கொண்டதால் என் உயிருக்கு ஆபத்து இல்லை. தற்போது, கொரோனா மூன்றாவது அலை வருவதாக கூறுகின்றனர். அது எப்படி இருக்கும் எனத் தெரியாது. எனவே, கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு, இங்கு சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் 1,500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இன்றோடு இதை நிறுத்தி விடாமல் எல்லா இடத்திற்கும் சென்று, தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு, மளிகை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. முறையாக பணி செய்யுங்கள். இல்லையென்றால், பட்டையை கிளப்பி விடுவேன். இடமாற்றம் செய்ய மாட்டேன், பணி நீக்கம் செய்து விடுவேன். புகார் என்றால், தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

நான் யாரையும் பழி வாங்க மாட்டேன். ஆனால், மக்களுக்கு தொண்டு செய்யாதோரை பழி வாங்குவேன். பள்ளிகள் திறக்க உள்ளதால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X