பொது செய்தி

இந்தியா

120 ஆம்புலன்ஸ்கள் முதல்வர் இன்று அர்ப்பணிப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா மூன்றாம் அலையை ஒட்டி முன்னெச்சரிக்கையாக, 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ், பெங்களூரு விதான் சவுதாவில், இன்று காலை, 120 ஆம்புலன்ஸ்களை பொது பயன்பாட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை அர்ப்பணிக்கிறார்.கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலையின் போது உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல், நுாற்றுக்கணக்கானோர் வீடுகளிலும், சாலையிலும் இறக்கும் அவல நிலை

பெங்களூரு : கொரோனா மூன்றாம் அலையை ஒட்டி முன்னெச்சரிக்கையாக, 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ், பெங்களூரு விதான் சவுதாவில், இன்று காலை, 120 ஆம்புலன்ஸ்களை பொது பயன்பாட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை அர்ப்பணிக்கிறார்.

கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலையின் போது உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல், நுாற்றுக்கணக்கானோர் வீடுகளிலும், சாலையிலும் இறக்கும் அவல நிலை ஏற்பட்டது.மாநில அரசும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வந்தது.எந்த நேரத்திலும் மூன்றாம் அலை ஆரம்பிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகப்படுத்தும்படி சுகாதார துறைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ், பெங்களூரு விதான் சவுதாவில், இன்று காலை, 120 ஆம்புலன்ஸ்களை பொது பயன்பாட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை அர்ப்பணிக்கிறார்.அதன் பின் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X