பொது செய்தி

தமிழ்நாடு

போர் கப்பலுக்கு செண்பகராமன் பெயர்

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் பாரதியார் நினைவு தினம், ஜெய்ஹிந்த் செண்பகராமன், பூமிதான இயக்க தலைவர் வினோபாஜி பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.மாநகர் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். தேசிய அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் பாரதியார் நினைவு தினம், ஜெய்ஹிந்த் செண்பகராமன், பூமிதான இயக்க தலைவர் வினோபாஜி பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.மாநகர் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். தேசிய அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் பேசினார். இதில் முப்பெரும் தலைவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.'அனைத்து பல்கலை கழகங்களிலும் பாரதியாரின் படைப்புகள், அனைத்து மொழிகளிலும் இருக்கை பெற்று கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஐ.என்.எஸ்.,விக்ராந்த் போர் கப்பலுக்கு ஜெய்ஹிந்த் செண்பகராமன் பெயர் சூட்ட வேண்டும்'ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். இளைஞர் பிரிவு தலைவர் மாரிச்செல்வம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட நிறுவனர் வைரவேல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X