பொது செய்தி

இந்தியா

மான நஷ்ட வழக்கு தொடருவேன்; அமைச்சர் பி.சி.பாட்டீல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
சித்ரதுர்கா : ''எங்களிடம் திருட்டுத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியவர்கள் மீது, நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்,'' என விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார். விவசாய உபகரணங்கள் வாங்கியதால் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக விவசாய துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி

சித்ரதுர்கா : ''எங்களிடம் திருட்டுத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியவர்கள் மீது, நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்,'' என விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.

விவசாய உபகரணங்கள் வாங்கியதால் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக விவசாய துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.இதற்கு பதிலளித்து சித்ரதுர்காவில், அவர் நேற்று கூறியதாவது:என் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து, எந்த விசாரணைக்கும் நான் தயார். எங்களிடம் திருட்டுத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. விவசாயத்துறை மட்டுமே வெளிப்படையாக செயல்படுகிறது. யார் குற்றம் சாட்டினரோ, அதை அவர்களே நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன். அரசியலில் குற்றம் சாட்டுபவர் இருப்பர். யார் சிறப்பாக பணியாற்றுகிறாரோ, அவர் மீது சிலர் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவர். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்திருந்தால், அக்கட்சியை வீட்டுக்கு அனுப்பியது ஏன். காங்கிரசை மக்கள் வெறுக்கின்றனர். 2023ன் தேர்தலிலும் எங்கள் கட்சியே, வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும். காங்கிரசில் ஊழல் இல்லையா; சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டு வரவில்லையா. இரும்பு மேம்பாலம் திட்டத்தில், 500 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, குற்றச்சாட்டு எழுந்தது. 'நிபா' தொற்று பரவாமல் கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கேரளாவிலிருந்து வருவோருக்கு, கொரோனா நெகடிவ் அறிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக, எந்த சட்டங்களும் இல்லை. விவசாயிகள் தங்களின் விளைச்சல்களை, எங்கு வேண்டுமானாலும் விற்க வாய்ப்பளித்துள்ளோம்.இந்த வாய்ப்பை அளித்த மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரானதா. இதனை விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என, சிலர் தவறான நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X