சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே மாதத்தில் திண்டுக்கல்லில் 24 பேருக்கு 'குண்டாஸ்'

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 24 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.மணல் திருட்டு, கொலை, கொள்ளை வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒரு குற்றத்தில் கைதாவோர் வெளியே

திண்டுக்கல்- -திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 24 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.மணல் திருட்டு, கொலை, கொள்ளை வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒரு குற்றத்தில் கைதாவோர் வெளியே வந்து அடுத்த குற்றத்தில் ஈடுபடுகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை 'குண்டாஸ்'சில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்ற கடந்த ஒரு மாதத்தில் குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் 24 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.எஸ்.பி., ஸ்ரீனிவாசன் கூறுகையில்,'' குற்ற நடவடிக்கைளில் எவர் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X